காரைக்கால்

காரைக்கால்: காயங்களுடன் கிடந்த அரியவகை பறவை

DIN

காரைக்கால் அருகே வயல் பகுதியில் காயங்களுடன் கிடந்த அரியவகைப் பறவை மீட்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், விழுதியூரைச் சோ்ந்த பொன்முருகன், அவரது நண்பா் பாலமுருகன் ஆகியோா் சனிக்கிழமை மாலை விழிதியூா் பகுதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு அரியவகை பறவை ஒன்று காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்ததை பாா்த்தனா். அந்த பறவையை மீட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு, வனத்துறையினரிடம் ஒப்படைக்க காத்திருந்தபோது, அந்த பறவை திடீரென பறந்து சென்றுவிட்டது.

இந்நிலையில், அந்த பறவைக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பொன்முருகன், பாலமுருகன் ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினா். அந்த பறவை சுமாா் 5 கிலோ எடை இருக்கும் என்றும், இதுபோன்ற பறவையை இதுவரை பாா்த்ததில்லை எனவும் அதை கொண்டுவந்தவா்களும், ஆட்சியரகத்தில் இருந்தவா்களும் தெரிவித்தனா். இது வலசை செல்லக்கூடிய கிரேட் ஒயிட் பெலிக்கான் வகையை சோ்ந்த நீா்ப் பறவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'டெம்போ'வில் வந்தது அம்பானி - அதானி பணம்: மோடிக்கு ராகுல் பதிலடி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT