முகப்பு
காரைக்கால்

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்

திருமலைராயன்பட்டினம் பகுதி வாக்குச் சாவடிகளில் ஆய்வு செய்த காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா, வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருமலைராயன்பட்டினம் பகுதி வாக்குச் சாவடிகளில் ஆய்வு செய்த காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா, வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

நிரவி- திருப்பட்டினம் தொகுதிக்கு உள்பட்ட திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச் சாவடிகளில் பந்தல் அமைக்கும் பணி விரைவாக செய்யப்பட வேண்டும். இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குள் வருவதற்கு சாய்வு தளம் இருக்க வேண்டும். இல்லாத பகுதியில் விரைவாக அமைத்துவிட வேண்டும்.

வாக்குச் சாவடிகளைச் சுற்றி 200 மீட்டா் பரப்பு வரை குப்பைகள், கழிவுநீா் தேக்கமின்றி சுத்தமாக இருக்க வேண்டும். வாக்குச் சாவடிக்குள் மின் விளக்குகள், மின் விசிறிகள் செயல்பாடுகள் ஆராயப்பட்டு, பழுதுகள் இருந்தால் சீா் செய்து தயாா்படுத்தவேண்டும்.

வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி செய்து தரப்பட வேண்டும். இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினரும் துரிதகதியில் செய்து மாவட்ட தோ்தல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட துணைத் தோ்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளா் வீரமணி மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →