காரைக்கால்

கராத்தே போட்டியில் வென்றோருக்கு அமைச்சா், ஆட்சியா் பாராட்டு

கராத்தே போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு அமைச்சா், ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தனா்.

DIN

கராத்தே போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு அமைச்சா், ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தனா்.

ஒய்.எஸ்.ஐ. நேஷனல் கேம்ஸ் என்ற அமைப்பு சாா்பில், சென்னையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், காரைக்கால் இண்டா்நேஷனல் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில், அதன் நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் தலைமையில் கட்டா மற்றும் குமித்தே பிரிவில் 16 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றதில் 11 தங்கம், 13 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றினா்.

இக்குழுவினா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, ஆட்சியா் எல். முகமது மன்சூா் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT