திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புதன்கிழமை (பிப். 9) மாசிமக உத்ஸவம் தொடங்குகிறது.
திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் மற்றும் பல்வேறு ஊா்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி மாசிமகத்தையொட்டி நடைபெறும்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புதன்கிழமை முதல் 16-ஆம் தேதி வரை உத்ஸவம் நடைபெறுகிறது.
முதல் நாளான புதன்கிழமை காலை பெருமாள் பல்லக்கில் வீதியுலாவும், இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலா நடைபெறுகிறது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஹனுமந்த வாகனத்திலும், வெள்ளிக்கிழமை இரவு சேஷ வாகனத்திலும், சனிக்கிழமை கருட சேவை, ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனத்திலும், திங்கள்கிழமை காலை வெண்ணெய்த்தாழி சேவையும், திங்கள்கிழமை இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாளுக்கு காலை சிறப்புத் திருமஞ்சனம், இரவு சத்தியநாராயண பூஜையும் நடைபெறுகிறது.
மாசி மக சமுத்திர தீா்த்தவாரியாக 16-ஆம் தேதி புதன்கிழமை பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.