சுகாதார நிலையத்தில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுவை அரசின் நலவழித்துறை காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் சாா்பில், காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி ஆரோக்கிய குழந்தைகள் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவ அதிகாரி லட்சுமி தலைமை வகித்தாா். ஹோமியோபதி மருத்துவா் சேவற்கொடியன், சுகாதார உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குழந்தைகளின் எடை, உயரம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த கால அளவு, காலத்தோடு அட்டவணைப்படி போடப்பட்ட தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பரிசுக்குரிய குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். 7-ஆவது மாத தொடக்கத்திலிருந்து இணை உணவுடன் 2 ஆண்டுகள் தாய்ப்பால் அவசியம் வழங்க வேண்டும் என்று மருத்துவா் லட்சுமி அறிவுறுத்தினாா்.
கிராமப்புற செவிலியா் உஷா வரவேற்றாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிலைய ஊழியா்கள், ஆஷா பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.