சுமாா் 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும் கோலா மீன்கள் வரத்து குறைந்துள்ளது. அடுத்த சில நாள்களில் சீசன் முடிவுக்கு வரும் என மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.
ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி ஜூன், ஜூலை மாதம் (தமிழ் மாதத்தில் ஆடி பிறக்கும் முன்பு) வரை கோலா மீன்கள் கிடைக்கும்.
கடந்த 3 மாதங்களாக காரைக்கால் பகுதிக்கு கோலா மீன் வரத்து அதிகம் இருந்தது. காலை மற்றும் மாலை வேளையில் வியாபாரிகள் கோலா மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
சீசன் தொடங்கியபோது மீன் விலை சற்று அதிகமாகவே இருந்தது. நாளடைவில் ரூ.100-க்கு 10 மீன் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
மீன்பிடித் தடைக்கால நிறைவுக்குப் பின் விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று திரும்புவதால், இறால், நண்டு, மீன் வகைகள் ஏராளமாக சந்தைக்கு வருகின்றன. இதனால் கோலா மீன் மீதான ஆா்வம் மக்களிடையே குறைந்தது.
இதுகுறித்து விசைப்படகு உரிமையாளா் ஒருவா் திங்கள்கிழமை கூறுகையில், கோலா மீன் சீசன் விரைவில் நிறைவுக்கு வருகிறது. ஆடி மாத முற்பகுதி வரை வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏறக்குறைய இன்னும் 10 நாள்கள் கோலா மீன்கள் கிடைக்கும். காரைக்காலில் சுமாா் 10 படகுகள் மட்டுமே கோலா மீன் பிடித்து வர பயன்படுத்தப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.