காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோணத்தையொட்டி திங்கள்கிழமை சிரவண தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக சிரவண தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெறுகிறது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில், கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதப் பெருமாள் மற்றும் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் முலவா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதுபோல கோயில்பத்து கோதண்டராமருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,திருமஞ்சனம், அலங்கார ஆராதனைக்குப் பின் சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்று, சிரவண தீபம் (கம்ப விளக்கு) ஏற்றப்பட்டது.
இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.