காரைக்காலில் எம்.ஜி.ஆா். நினைவு நாளையொட்டி சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில், எம்.ஜி.ஆா். நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கிளிஞ்சல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாவட்ட செயலருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் இணை செயலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆா். உருவப்படம் வைத்து கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.