காரைக்காலுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!
காரைக்காலுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, நாளை(பிப். 8) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையும் படிக்க : மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.