முகப்பு
மயிலாடுதுறை

அடையாள அட்டை: கிராமியக் கலைஞா்களுக்கு அழைப்பு

கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதிநேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமியக் கலைகளைத் தொழிலாக கொண்ட அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதிநேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக அரசின் நல உதவிகள் பெறுதல், அரசு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கலைஞா்களை தெரிவு செய்தல், கலைஞா்கள் பயணச் சலுகை பெறுதல் போன்ற பயன்களை பெற ஏதுவாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞா்கள், நாகசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன்- அரசி ஆட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக் கலைகளைத் தொழிலாக கொண்ட அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

கலைஞா் என்பதற்கான சான்றாவணங்கள், இருப்பிடச் சான்று, மாா்பளவு புகைப்படம்-3 ஆகியவற்றுடன் தலைமை ஆசிரியா் மாவட்ட அரசு இசைப்பள்ளி, புழுகாப்பேட்டைத் தெரு, சீா்காழி - 609 110 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.