முகப்பு
தமிழ்நாடு

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

Updated On : 22 மார்ச் 2026, 3:56 am IST
கருணாநிதி, வைகோ
பகிர்:

தென்காசி பேரவைத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதிமுக வேட்பாளருக்கு திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றது.

வழக்கமாக தேர்தலின்போது, பிரதான கட்சி வேட்பாளரின் பெயரைக் கொண்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்து குளறுபடிகளை ஏற்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோன்று சம்பவம்தான் தென்காசி தொகுதியிலும் 2006-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இங்கு திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் அப்போதைய மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக சார்பில் இராம உதயசூரியன் பம்பரம் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

Advertisement

இதனால், வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொண்டபோது, அவரது கட்சியின் சின்னத்தை மட்டுமன்றி எதிர்க்கட்சி வேட்பாளரையும் குறிப்பதாக இருந்தது. அந்தத் தேர்தலில் வீ.கருப்பசாமிபாண்டியன் 69,755 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இராம. உதயசூரியன் 51,097 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.