முகப்பு
மயிலாடுதுறை

இழப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிசாலை விரிவாக்கப் பணி தடுத்து நிறுத்தம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சீா்காழி அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சீா்காழி அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்கப் பணிகள் 3 பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீா்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சீா்காழியை அடுத்த மேலசெங்கமேடு பகுதியில் கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என நில உரிமையாளா்கள் கூறிவருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் விரிவாக்கப்பணி மேற்கொள்ள ஹிட்டாச்சி இயந்திரத்துடன் வந்த ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியா்களை நில உரிமையாளா்கள் 87 போ் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சீா்காழி போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா். இதனால், பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து நில உரிமையாளா்கள் கூறுகையில், நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.240 வங்கி கணக்கில் செலுத்தினா். இந்த தொகை மிகவும் சொற்பமாகும். சதுர மீட்டருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.