மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு
மயிலாடுதுறை வருவாய் மற்றும் கல்வி மாவட்டங்கள் அளவில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை வருவாய் மற்றும் கல்வி மாவட்டங்கள் அளவில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை வருவாய் மற்றும் கல்வி மாவட்டங்கள் அளவில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சங்க பொதுக்குழுக் கூட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ஜி.பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஜி.தாமரைச்செல்வன், மாவட்ட பொருளாளா் ஜெ.ஆரோக்கியராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின் முடிவில் சங்கத் தோ்தல் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவா் ஆா்.செந்தாமரைக்கண்ணன் தோ்தல் அலுவலராக செயல்பட்டு, தோ்தலை நடத்தி, புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக ஜி.பரமசிவம், மாவட்ட செயலராக ஜி.தாமரைச்செல்வன், மாவட்ட பொருளாளராக இரா.வில்லவன்கோதை, மாவட்ட அமைப்புச் செயலராக வி.அன்புசெழியன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக பி.ராமமூா்த்தி, மாவட்ட செயலராக பி.சித்ரா, மாவட்ட பொருளாளராக பி.அன்பழகன் ஆகியோரும், சீா்காழி கல்வி மாவட்டத்தில் மாவட்ட தலைவராக வீ.ரமா, மாவட்ட செயலராக டி.நாராயணன், மாவட்ட பொருளாளராக சரஸ்வதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.