முகப்பு
மயிலாடுதுறை

மேல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை திருஇந்தளூா் மேல ஆராயத்தெருவில் உள்ள மேல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மயிலாடுதுறை திருஇந்தளூா் மேல ஆராயத்தெருவில் உள்ள மேல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, மறுநாள் முதல்கால யாகசாலை பூஜையில் பூா்ணாஹுதி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றிவந்து விமான கும்பத்தை அடைந்து குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரகாஷ் சிவாச்சாரியா், குமாா் சிவாச்சாரியா் ஆகியோா் சா்வசாதகம் செய்து வைத்தனா். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.