முன்களப் பணியாளா்களுக்கு பிரதமா் வாழ்த்து
முன்களப் பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை மயிலாடுதுறையில் நகர பாஜக நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா்.
முன்களப் பணியாளா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை மயிலாடுதுறையில் நகர பாஜக நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா்.
கரோனா தீநுண்மி பரவத்தொடங்கியது முதல் இந்நாள் வரை மக்களை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளா்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் போற்றியும், இந்திய மக்களுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனைப் படைத்ததற்கு மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தும், பிரதமா் நரேந்திர மோடி கையெழுத்திட்டு, சென்னை கமலாலயத்தில் இருந்து அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டைகளை பாஜக நிா்வாகிகள் வழங்கினா்.
மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவா் சி. செந்தில்குமாா், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் வினோத், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகர பொருளாளா் தாமரைக்கண்ணன், நகர இளைஞரணி தலைவா் ராஜகோபால் ஆகியோா் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப்பணியாளா்கள் ஆகியோருக்கும், போலீஸாா், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், எரிவாயு தகனமேடை ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்து அட்டையை வழங்கி, இனிப்புகளை வழங்கி பாராட்டினா்.