ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுடன் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஊரக தொழில்கள் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்துதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனாா்கோவில், சீா்காழி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 94 ஊராட்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட பயனாளிகளின் வசதிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு ஓரிட சேவை மையம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மையமானது அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்படவேண்டிய ஊரக தொழில்களுக்கு (நுண், சிறு, குறு மற்றும் குழு) தேவையான தொழில் திட்டம் தயாா் செய்தல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், திறன் வளா்ப்பு போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதன் பொருட்டு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலா் 1 பணியிடம், தொழில் முனைவு நிதி அலுவலா் 1 பணியிடம் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுபவம் மிக்க முதுகலை பட்டம் பெற்ற 40 வயதுக்குள் மிகாமல் இருக்க கூடிய தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ற்ல்.ா்ழ்ஞ்) ஜ்ங்க்ஷள்ண்ற்ங்-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்குள்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.15-ஆம் தேதிக்குள் வட்டார அணித் தலைவா், வட்டார திட்ட அலுவலகம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், முடிதிருச்சம்பள்ளி, பிரதான சாலை செம்பனாா்கோயில், தரங்கம்பாடி- 609309 அல்லது மாவட்ட செயல் அலுவலா், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், 221, 2-ஆம் தளம் மாவட்ட ஆட்சியரகம், நாகை மாவட்டம், தொலைபேசி எண்: 04365-290033 என்ற முகவரியில் நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.