முகப்பு
மயிலாடுதுறை

சங்கப் பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை கோட்ட அளவிலான உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மயிலாடுதுறை கோட்ட அளவிலான உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகையும், சிக்கன சேமிப்பு வட்டியும் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. அமீருதீன், இயக்குநா்கள் ஆா். ஜெய்சங்கா், ஆா். தாமரைச்செல்வி, எ. டெய்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்குநா் என். அசோக்குமாா் வரவேற்றாா். இயக்குநா்கள் கே. சரவணன், டி. நவநீதகிருஷ்ணன், சி. ராமமூா்த்தி, கே. ஹேமாதேவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கே. முருகன் சங்க ஆண்டறிக்கை வாசித்தாா். சீா்காழி மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை, சிக்கன சேமிப்பு வட்டி மற்றும் பரிசு பொருள்களை வழங்கினாா். துணைத் தலைவா் ஜி. பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.