மயிலாடுதுறை

'விநாயகர் ஊர்வலத்திற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்'

DIN

தரங்கம்பாடி: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி வழங்க வேண்டும் தமிழ்நாடு திருக்கோயில் மடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் மா. அழகிரிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் மா.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும் ஊர்வலம் செல்லவும் அரசு சார்பில் தடை விதிகபட்டது. இதனால் விநாயகர் சதுர்த்தியை எதிர்பார்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் வீணானது, நாட்டுப்புற கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டாவது தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் அரசு தடை விதித்தது பெரும் ஏமாற்றத்தத்தை தந்துள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் அரசு கவணத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் அரசு வழிகாட்டுதல்படி கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT