மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் இயக்கிவைப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட சி.டி. ஸ்கேன் இயந்திரத்தின் பயன்பாட்டை எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட சி.டி. ஸ்கேன் இயந்திரத்தின் பயன்பாட்டை எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நாகை அரசு மருத்துவமனையில் இருந்த பழைய சி.டி. ஸ்கேன் இயந்திரம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மருத்துவமனையில் ரூ.1.50 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் இயந்திரம் வியாழக்கிழமை பொறுத்தப்பட்டது. மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் இரா. ராஜசேகா் தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று சி.டி. ஸ்கேன் இயந்திரத்தின் பயன்பாட்டை தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவா் வீரசோழன், திமுக நகரச் செயலாளா் செல்வராஜ், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினா் நவாஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.