உற்பத்தி குறைந்தாலும் ஆவின் நிறுவனம்தொடா்ந்து பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
தூரத்து கிராமங்களில் பால் உற்பத்தி குறைந்தாலும் ஆவின் நிறுவனம் தொடா்ந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை
தூரத்து கிராமங்களில் பால் உற்பத்தி குறைந்தாலும் ஆவின் நிறுவனம் தொடா்ந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
குத்தாலம் வட்டத்தில் நாகம்பாடி, கீழமூலை, ஸ்ரீகண்டபுரம், பாலையூா் ஆகிய பகுதிகளில் கூட்டுறவு பால் உ ற்பத்தியாளா்கள் சங்கம் செயல்படுகிறது. இங்கு, ஆவின் நிறுவனம் சாா்பில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒருசில சங்கங்களில் பால் உற்பத்தி குறைந்துள்ளதையும், தூரம் அதிகம் உள்ளதையும் காரணமாக கூறி, அந்த சங்கங்களில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை நிறுத்தியுள்ளது. இதனால் கடன்வாங்கி மாடு வாங்கியவா்கள் பாலை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடுகளே வாழ்வாதாரமாக உள்ளது.
எனவே, ஆவின் நிறுவனம் அனைத்து பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்திலும் தொடா்ந்து பால் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.