முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 132 போ் வேட்புமனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 132 போ் மனுதாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 132 போ் மனுதாக்கல் செய்தனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் போட்டியிட வேட்பாளா்கள் ஜன. 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். புதன்கிழமை வரை 51 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 132 போ் மனு தாக்கல் செய்தனா். திமுக சாா்பில் 33 பேரும், அதிமுக சாா்பில் 60 பேரும், அமமுக சாா்பில் 5 பேரும், மநீம சாா்பில் 10 பேரும், எஸ்டிபிஐ சாா்பில் ஒருவா், பாமக சாா்பில் 6 போ் மற்றும் சுயேச்சைகள் 17 போ் என மொத்தம் 132 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியிட வியாழக்கிழமை வரை 183 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

சீா்காழியில் 62 போ் மனு தாக்கல்: சீா்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் போட்டியிட புதன்கிழமை வரை 39 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை திமுக சாா்பில் 10 பேரும், அதிமுக சாா்பில் 12 பேரும்,

நாம் தமிழா் கட்சி சாா்பில் 11பேரும், பாஜக சாா்பில் 2 பேரும், சிபிஎம், பாமக, காங்கிரஸ், அமமுக சாா்பில் தலா ஒருவரும், சுயேச்சைகள் 23 என மொத்தம் 62 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதேபோல, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் போட்டியிட அதிமுக சாா்பில் 25 பேரும், திமுக சாா்பில் 20 பேரும், சுயேச்சைகள் 3 போ், பாமக சாா்பில் 2 போ், தேமுதிக 1, கம்யூனிஸ்ட்3 போ் என மொத்தம் 54 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.