முகப்பு
மயிலாடுதுறை

தீக்குளித்த பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே தீக்குளித்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே தீக்குளித்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி சசிகலா (60). மனநலன் பாதிக்கப்பட்ட இவா், புதன்கிழமை வீட்டில் தனியாக இந்தபோது, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அவரை உறவினா்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.