தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு விநாடி-வினாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை பரிசு வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை பரிசு வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஆா். மகேந்திரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பி. பிரதாப்குமாா், துணை இயக்குநா் (தொழுநோய்) எஸ். சங்கரி, மயிலாடுதுறை அரசு குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், வட்டார மருத்துவ அலுவலா் ஆா். சரத்சந்தா் உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவா்கள் கலந்துகொண்டனா்.