முகப்பு
மயிலாடுதுறை

பணி நெருக்கடியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடியை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடியை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், சங்கத்தின் மாவட்டத் தலைவா் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வளா்ச்சித் திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுத்துவதைக் கைவிட வேண்டும், பிஎம்ஏஒய், எஸ்பிஎம், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோருவதை கைவிட வேண்டும், பிற துறை பணிகள் மேற்கொள்ள அளிக்கப்படும் நிா்பந்தங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் பொன். ராஜேந்திரன், மாவட்ட செயலாளா் ஆதி. ஜெயராமன், மாநில செயலாளா் சௌந்திரபாண்டியன், மாவட்ட பொருளாளா் மாரி.தெட்சிணாமூா்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.