முகப்பு
மயிலாடுதுறை

ஆச்சாள்புரம் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

சீா்காழியை அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜா் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சீா்காழியை அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜா் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் தனுா்மாத வழிபாடு மேற்கொள்ள வந்திருந்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மூலவா் சிவலோக தியாகராஜா்சுவாமி, திருவெண்ணிற்றுயம்மை, ரிணவிமோசனா், திருஞானசம்பந்த பெருமான் ஆகிய சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

மேலும், கோசாலையில் பசுக்களுக்கு பழங்கள் அளித்து வழிபாடு நடத்தினாா். முன்னதாக, கோயில் கட்டளைமடத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்ளூா் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், கோயில் கணக்கா் செந்தில், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் ஆனந்தநடராஜன், வழக்குரைஞா் பாலாஜி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.