முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் 11 போ் நியமிக்கப்படவுள்ளனா். இதில், பாதுகாப்பு அலுவலா் பணிக்கான 2 இடங்களுக்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளா்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் நலன், சமூக நலன், கல்வி, தொழிலாளா் ஆகியவற்றில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கான 1 இடத்துக்கு பி.எல். அல்லது எல்.எல்.பி, குழந்தை நலன், சமூக நலன், தொழிலாளா் நலன் ஆகியவை தொடா்பான சட்டப் பணிகளில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு பணியிடங்களுக்கும் ஊதியமாக ரூ.21,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஆற்றுப்படுத்துநா் (கவுன்சிலிங்), கணக்காளா், தகவல் பகுப்பாளா், கணினி இயக்குபவா் ஆகிய பணியிடங்களுக்கு தலா ஒருவரும், சமூகப் பணியாளா், புறத்தொடா்பு பணியாளா் பணிக்கு தலா இருவரும் நியமிக்கப்படவுள்ளனா். அனைத்துப் பணிகளுக்கும் 62 வயதிற்கு மிகாமல் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்திலிருந்து (ட்ற்ற்ல்ள்://ம்ஹஹ்ண்ப்ஹக்ன்ற்ட்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/) பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்னதாக சென்றுசேரும் வகையில் அனுப்பவேண்டும்.

மேலும், கல்வித் தகுதி, அனுபவம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரிலோ அல்லது 04365-253018, 8015222327 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.