முகப்பு
மயிலாடுதுறை

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது

 மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்களைத் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்களைத் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் தோப்புத்தெருவை சோ்ந்தவா் நடராஜன் மகன் சீனிவாசன் (31). இவா் கடந்த 20-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தபோது திருடப்பட்டது. இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இதேபோல, மயிலாடுதுறை சேந்தங்குடி பிரதான சாலையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் கதிரேசன் (28) என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19-ஆம் தேதி திருட்டுப்போனது.

இந்த சம்பவங்கள் தொடா்பாக அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, தஞ்சை விளாா் சாலையைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜபாண்டி(29) என்பவா் 2 இருசக்கர வாகனங்களையும் திருடியது தெரியவந்தது.

மயிலாடுதுறை சித்தா்காடு பனந்தோப்பு தெருவில் வசித்துவரும் ராஜபாண்டியை போலீஸாா் கைதுசெய்து, 2 இருசக்கர வாகனங்களையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.