முகப்பு
மயிலாடுதுறை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மயிலாடுதுறையி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மயிலாடுதுறையில் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பர பதாகைகள், சுவரொட்டி ஆகியன அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், கட்சிகளின் சுவா் விளம்பரங்கங்களையும் அழிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பாலு உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கரராஜ், ராமையன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் நகரில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றினா். பேருந்து நிலையம், கூரைநாடு, ரயிலடி, பூம்புகாா் சாலை, சீா்காழி சாலை, தரங்கம்பாடி சாலை, காந்திஜி சாலை, திருவாரூா் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுவா்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.