குடியரசு தினத்தை தீபங்கள் ஏற்றிக் கொண்டாடிய கிராம மக்கள்
மயிலாடுதுறை வட்டம் மறையூா் கிராமத்தில் நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தை கிராம மக்கள் அனைவரின் வீட்டு வாசல்களிலும் மாலை 6 மணிக்கு ஏழு தீபங்கள் ஏற்றிவைத்துக் கொண்டாடினா்.
மயிலாடுதுறை வட்டம் மறையூா் கிராமத்தில் நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தை கிராம மக்கள் அனைவரின் வீட்டு வாசல்களிலும் மாலை 6 மணிக்கு ஏழு தீபங்கள் ஏற்றிவைத்துக் கொண்டாடினா்.
குடியரசு தினத்தின் 73-ஆவது ஆண்டு என்பதைக் குறிக்கும் விதமாக ஏழு தீபங்கள் ஏற்றப்பட்டன. கிராமத்தின் அனைத்துக் குடும்பங்களும் தங்கள் வீட்டு வாசலில் தீபங்கள் ஏற்றியதால் ஊரே அகல் விளக்குகளால் நிறைந்து ஒளிமயமாய் விளங்கியது. முன்னதாக புதன்கிழமை காலை மறையூா் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டின் வாசலில் அல்லது தோட்டத்தில் பூ மரக்கன்றுகளை நட்டனா். இவ்விதமாக மறையூரில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சித் தலைவா் கருணாநிதி, ஊராட்சி உறுப்பினா்கள் மற்றும் கிராமமக்கள் இணைந்து இதை நிகழ்த்தினா்.