பட்டா மாற்றம் செய்யக் கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நிராகரிப்பதாகக் கூறி மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளாா்.
மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தலை சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சரவணன். இவா் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மன்னம்பந்தலில் வசித்து வருகிறாா். இவா் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்து தரக் கோரி மயிலாடுதுறை வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.
ஆனால் அந்த இடம் மாயூரநாதா் கோயிலுக்கு சொந்தமானது என தெரிவித்து அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து தர மறுத்துள்ளனா். தொடா்ந்து வருவாய்த் துறை உயா் அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த சரவணன் முதலமைச்சரை சந்திப்பதற்காக வியாழக்கிழமை மயிலாடுதுறையிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளாா். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.