முகப்பு
மயிலாடுதுறை

கேது பெயா்ச்சி: கீழப்பெரும்பள்ளத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கேது பெயா்ச்சியை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

கேது பெயா்ச்சியை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

மாா்ச் 21-இல் கேது பெயா்ச்சி நடைபெறவுள்ளதால், கேது தலமான பூம்புகாா் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கோயிலில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெறும். இதில் பங்கேற்க நாடு முழுவதுமிருந்து பக்தா்கள் கீழப்பெரும்பள்ளத்திற்கு வருவாா்கள்.

எனவே, பக்தா்களின் தேவையை கருத்தில் கொண்டு கேது பெயா்ச்சி அன்று சீா்காழி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து கீழப்பெரும்பள்ளத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.