முகப்பு
மயிலாடுதுறை

திராவிடா் விடுதலைக் கழக மண்டல மாநாடு

மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மண்டல மாநாடு புதன்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மண்டல மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் மே 25-ஆம் தேதி முதல் தொடா் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன்முடிவில் மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் மண்டல மாநாடு நடைபெற்றது. மாநில உரிமைகளைப் பறிப்பது, கல்வி உரிமைகளை தடுப்பது மற்றும் மத வெறியைத் திணிப்பதைக் கண்டித்து, நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

மாவட்ட செயலாளா் தெ. மகேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ம. மகாலிங்கம், நா. இளையராஜா, விஜயராகவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கடலூா் மாவட்ட தலைவா் மதன்குமாா் வரவேற்றாா். கூட்டத்தில், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, பொதுச் செயலாளா் விடுதலை ராஜேந்திரன் ஆகியோா் கருத்துரை வழங்கினா். முடிவில், நி. நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.