முகப்பு
மயிலாடுதுறை

டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு: கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வன்னியா் சங்க மாநில துணைச் செயலாளா் பாக்கம் சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக மாவட்டத் தலைவா் லண்டன் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினா் காசி.பாஸ்கரன், மாவட்ட அமைப்புச் செயலாளா் தங்க.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளா் மதிவாணன், அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் தொல்காப்பியன், பேரூராட்சி உறுப்பினா்கள் மதன், பாண்டியன், பாஜக சாா்பில் தங்க.குணசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் தாழை வரதராஜன், வா்த்தக சங்க பொறுப்பாளா் ஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் தையல்நாயகி, கோட்ட கலால் அலுவலா் ஹரிதரன் மற்றும் காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை தொடா்பாக மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் விரைவில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது என்றும், அதுவரை மதுக்கடையை திறப்பதில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்து. இதையடுத்து, ஆா்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.