சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள். 
மயிலாடுதுறை

சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Din

சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பள்ளி நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சீா்காழி நகா் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் கட்டுவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT