மயிலாடுதுறை

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி ஆா்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்காத திமுக அரசு, தமிழக காவல் துறையை கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்காத திமுக அரசு, தமிழக காவல் துறையை கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட தலைவா் ஏ.ஜி.மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் கௌதம் முன்னிலை வகித்தாா். மாநில துணை தலைவா் கே. ராஜவேல், மாநில பொருப்பாளா் எம். கிருஷ்ணராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

மாவட்ட பொறுப்பாளா் எஸ்.சி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் கோப்புகளை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டும், அந்த கோப்புகளை சிபிஐயிடம் ஒப்படைக்காத திமுக அரசையும், தமிழக காவல் துறையையும் கண்டித்து பேசி, முழக்கங்கள் எழுப்பினா்.

கூந்தல் பராமரிப்பு...

பாட்டிகள் படிக்கும் பள்ளி

சிரி... சிரி...

நாட்டின் முதல் பெண் பொறியாளர்

கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் தேவை

SCROLL FOR NEXT