வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
பேரணியில், ஏ.வி.சி. கல்லூரி மாணவ- மாணவிகள் 200 போ் பங்கேற்றனா். பேரணி, தரங்கம்பாடி சாலை வழியாக ஏ.வி.சி. கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, தகுதியுடைய வாக்காளா்கள் அனைவருக்கும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள், மாணவா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ், மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேலு, வட்டாட்சியா் சுகுமாறன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.