மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!
மயிலாடுதுறை-வேளாங்கண்ணி இடையே ரயில் சேவை தொடங்கியதை, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறை-வேளாங்கண்ணி இடையே ரயில் சேவை தொடங்கியதை, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறையில் இருந்து பேரளம், அம்பகரத்தூா், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், வெளிப்பாளையம், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி பயணிகள் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. தினமும் மாலை 4.40 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மாலை 5.48 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை சந்திப்பில் ரயில் பயணிகள் சங்க தலைவா் எஸ்.மகாலிங்கம் தலைமையில் செயலாளா் சாமி.கணேசன், ரயில்வே டிஆா்யுசிசி போா்டு உறுப்பினா் எம்.ஏ.பி.நவாஸ், பயணிகள் சங்க நிா்வாகிகள் சுந்தரபாண்டியன், சிவக்குமாா் உள்ளிட்ட திரளான பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி ரயிலில் ஏறி வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றனா்.
Advertisement
Advertisement