முகப்பு
நாகப்பட்டினம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இந்து மக்கள் கட்சி வரவேற்பு

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடியது.
ஊழலுக்கு எதிராக கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூ. 500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு தடை செய்து  (நவ.8-ஆம் தேதியுடன்) ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஊழல் அரசியல் வாதிகளும், தீவிரவாத  இயக்கங்களும், மாவோயிஸ்டுகளும் இந்நாளை கருப்பு தினமாக கொண்டாடக் கூடிய சூழலில் இந்து மக்கள் கட்சி  2-ஆவது சுதந்திர தினமாக புதன்கிழமை கொண்டாடியது.
சீர்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட தலைவர் சோலை கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர்  சொக்கலிங்கம், நகர இளைஞர் அணி பொறுப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →