முகப்பு
நாகப்பட்டினம்

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சீர்காழி மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

சீர்காழி மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் அ.நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
 தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் சீர்காழி கோட்டத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் சீர்காழி கோட்ட அலுவலகத்தில் நாகப்பட்டினம் கோட்டப் பொறியாளர் டி.சாமுவேல் ராஜசேகரன் தலைமையில் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம்,  மாதானம், அரசூர், காளி, மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, தரங்கம்பாடி, ஆக்கூர், பூம்புகார்,  செம்பனார்கோயில், கிடாரங்கொண்டான், திருக்கடையூர் ஆகிய பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதிகளில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள்  மற்றும் பொதுமக்கள் இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பகுதியில் உள்ள மின் வாரிய குறைகளைத்  தெரிவிக்கலாம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →