இருவக்கொல்லை சாலையை மேம்படுத்தக் கோரிக்கை
சீர்காழியை அடுத்த இருவக்கொல்லை கிராமச் சாலையை மேம்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
சீர்காழியை அடுத்த இருவக்கொல்லை கிராமச் சாலையை மேம்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி கிராமத்துக்கும், இருவக்கொல்லை கிராமத்துக்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம் தார்ச் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, இந்தச் சாலையை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.