நாகப்பட்டினம்

மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

DIN

பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சீதளா பரமேஸ்வரி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், 26-ஆம் தேதி ஏகதினலெட்சார்ச்சனையும், 28-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம்  மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT