முகப்பு
நாகப்பட்டினம்

ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான நெகிழிப் பைகள் பறிமுதல்

நாகை கடைவீதியில் உள்ள பழக்கடைகளிலிருந்து சுமார் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான நெகிழிப் பைகள், உணவுப் பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

Updated On : 13 பிப்ரவரி 2019, 6:54 am IST
பகிர்:

நாகை கடைவீதியில் உள்ள பழக்கடைகளிலிருந்து சுமார் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான நெகிழிப் பைகள், உணவுப் பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டன. 
நாகை கடைவீதியில் உள்ள பழக்கடைகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற புகாரின் பேரில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன், பழக்கடைகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பெரும்பாலான கடைகளில் நெகிழிப் பைகளின் பயன்பாடு கைவிடப்பட்டிருந்தாலும், ஒரு சில கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பழக் கடைகளில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.