நாகப்பட்டினம்

வேன் மோதி ஒருவர் பலி

வேளாங்கண்ணி அருகே வேன் மோதி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


வேளாங்கண்ணி அருகே வேன் மோதி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ப.சங்கர் (45). இவர், வெள்ளிக்கிழமை செருதூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையைக்  கடக்க முயன்றார்.
அப்போது, திருத்துறைப்பூண்டி பகுதியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதியதில் பலத்த காயமடைந்த சங்கர், நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து, கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் ப. ராஜேஷ் (37) என்பவரை கைதுசெய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT