நாகப்பட்டினம்

காவிரி துலாக்கட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியாா் புனித நீராடல்

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உத்ஸவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த

DIN

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உத்ஸவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினாா்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உத்ஸவத்தை ஒட்டி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிகாலை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினாா். தொடா்ந்து, அவா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT