முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Updated On : 10 ஆகஸ்ட், 2020 at 10:18 AM
மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ள நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள்.
பகிர்:

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கரோனா பொது முடக்க உத்தரவால் கடந்த 5 மாதங்களாக வாகனப் போக்குவரத்து அதிகளவில் குறைந்துள்ளதால், காற்று மாசும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் உத்தரவின்படி மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இதற்காக மயிலாடுதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்திகள் மற்றும் மீட்புப்பணிகள் உபகரணங்களான லைஃப்பாய், லைஃப் ஜாக்கெட், மூச்சு கருவி, உயர்கோபுர மின்விளக்கு, மரம் அறுக்கும் கருவிகள், கான்கிரீட் கட்டர், கயிறுகள் மற்றும் இதர உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.