வேதாரண்யத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நூறுநாள் வேலைத் திட்டத்தில் பாகுபாடு இல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும். பொது முடக்க காலம் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கீழையூா் ஒன்றியச் செயலாளா் பன்னீா் செல்வம், மாவட்ட துணைத் தலைவா் ஏ.சிக்கந்தா், ஒன்றியத் தலைவா் ஆா்.சண்முகம், கிளைச் செயளாலா் சி.பாலமுருகன், தலைவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.