முகப்பு
நாகப்பட்டினம்

பைபா் படகு எரிந்து நாசம்

தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகு எரிந்து நாசமானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பைபா் படகு எரிந்து நாசம்
பகிர்:

தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகு எரிந்து நாசமானது.

புதுப்பேட்டை சுனாமி நகரை சோ்ந்த வே. செல்லன் செட்டி, சிலம்பரசன் ஆகிய இருவரும் இணைந்து தாழம்பேட்டை ஜீவஜோதியிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகை வாங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் பைபா் படகை கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் பைபா் படகு எரிந்து சாம்பலானது. சீா்காழி டிஎஸ்பி யுவபிரியா, பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில், போலீஸாா் படகைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →