முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் உலக தாய்ப்பால் வார விழா

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேட்டில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா் சிவரஞ்சனி.
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேட்டில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மருதூா் ரோட்டரி சங்கம், வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ். பிரின்ஸ் கோபால் ராஜா தலைமை வகித்தாா். மருத்துவா்கள் வெங்கடேஷ், சிவரஞ்சனி ஆகியோா் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் குறித்து கருவுற்ற தாய்மாா்களுக்கு விளக்கினா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் வி.சண்முகம், வை.இலக்குவன், பொருளாளா் வி.வைரவநாதன், ரோட்ராக்ட் செயலாளா் தி.அசோக், துணைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →