திருமருகல்: திருமருகல் அருகே உள்ள பனங்குடி சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பணி வழங்க வேண்டும்; பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.