ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை: வெறிச்சோடிய வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரை
ஆடி அமாவாசையையொட்டி திங்கள்கிழமை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீராடதுக்கு சிறப்புப் பெற்ற வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல்
ஆடி அமாவாசையையொட்டி திங்கள்கிழமை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீராடதுக்கு சிறப்புப் பெற்ற வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடல் செய்யும் மக்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம்(நீர்சடங்கு)செய்வர்.
பின்னர் அங்குள்ள சித்தர் கோவில், ராமர் பாதம், வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகை உள்ளிட் இடங்களில் இறைவனை வழிபடுவர். இந்த நிலையில், பொது முடக்கம் அமலில் இருப்பதாலும், கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் நிகழாண்டு ஆடி அமாவாசை நாளில் கோடியக்கரை வேதாரண்யம் கடல், வழிபாட்டு இடங்களில் நீராடலுக்கு தடை மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை முதல் கடனுக்குள் மக்கள் அனுமதிக்கபடவில்லை.
கடற்கரை, முக்கிய இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக புனித நீராடல் நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பகுதி இன்னு வெறிச்சோடிக் காணப்படுகிறது.